விருத்தாசலம், பண்ருட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம், பண்ருட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:46 PM GMT)

விருத்தாசலம், பண்ருட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ராஜீவ் காந்தி, மாவட்ட பொது செயலாளர் ராஜா, இருதயசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார தலைவர்கள் ராவணன், ராமராஜன், சாந்தகுமார், பீட்டர், முருகானந்தம், கலியபெருமாள், மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ஹேமலதா, லாவண்யா, கவிதா உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பெண்ணாடம் நகர தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். நல்லூர் வட்டார தலைவர் சக்திவேல் ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கையை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாநில செயலாளர் அன்பரசு, தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் டாக்டர் தங்கதுரை, ஐ.என்.டி.யு.சி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இறையூர் எஸ்.மா.கந்தசாமி நன்றி கூறினார்.

பாளையங்கோட்டை

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் வைத்தியநாதசாமி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் வீரப்பன், அரிகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் புகழேந்தி ராமலிங்கம், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வேங்கடகிரி வரவேற்றார். கடலூர் மாவட்ட தலைவர் என்.வி. செந்தில்நாதன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன், சீனு ராஜேந்திரன், பாஸ்கர், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருள்வைத்தியநாதசாமி நன்றி கூறினார்.

பண்ருட்டி

பண்ருட்டி நகர காங்கிரஸ் சார்பில் கும்பகோணம் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நகர தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, சபியுல்லா, மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை தலைவர் மகபூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திலகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி. மாவட்ட தலைவர் வெற்றி செல்வன், வட்டார தலைவர்கள் குலோத்துங்கன், கேசவன், நகர துணை தலைவர் பாலு, பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் கிருஷ்ணராஜ், துணை செயலாளர் சிவக்குமார், புதுப்பேட்டை நடராஜன், நிஷார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story