தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே பாண்டி கடைத்தெருவில் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் நடந்தது. முன்னதாக வட்டார செயலாளர் விஜயகாந்த் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வே வீரமணி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கருணாநிதி, மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெட்ரோமாலிக், கராரமேஷ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, திருத்துறைப்பூண்டி நகரதலைவர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன், தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளர் தமிழ்ச்செல்வன், வி.சி.க. மாவட்ட பொருளாளர் வெற்றி ஆகியோர் பேசினா். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story