கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயல்தலைவர் பிச்சைமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் செந்தில்காமு, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜெயப்பாண்டி, மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், 'ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பில் போடும் போது, கைரேகை பதியாததால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஊழியர்கள் மனதளவில் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழக அரசும், கூட்டுறவுத்துறையும் தலையிட்டு இந்த பிரச்சினைக்கும் தொடரும் சர்வர் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். 4 விதமான அரிசி வழங்குவதால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, தரமான அரிசி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story