காதுகேளாதோர், வாய்பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காதுகேளாதோர், வாய்பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
கலெக்டர் அலுவலகத்தில் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமித்திட வேண்டும். நீதிமன்றத்தில் சைகைமொழி பெயர்ப்பாளரை நியமித்திட வேண்டும். அரசு மருத்துவமனையில் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமித்திட வேண்டும். காவல்துறை உதவி, 100 மற்றும் 108-ல் வாட்ஸ்-அப் செயலியை உருவாக்கிட வேண்டும்.
கல்வித்துறை சைகை மொழி பெயர்ப்பாளரை நியமித்திட வேண்டும். வாட்ஸ்-அப்பில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய்பேசாதோர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மனோகரன், கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வாசு, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story