ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர் ஜென்னியம்மாள் தலைமை தாங்கினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
60 வயது நிரம்பிய முதியோர், கணவரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் விரல் ரேகை எந்திரத்தில் பதிவாகவில்லையெனில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலபாரதி, பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் இந்தப் போராட்டத்தில் முதியோர், கணவரை இழந்தவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.