ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
சேலம்

தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் வெற்றிவேல், மேற்கு மாநகர தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை உயர்த்தக்கூடாது, 12 மணி நேரமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.


Next Story