ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திருச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் மீதான தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் விற்பவர்களை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இரவு 11:30 மணி அளவில் திடீரென ஆர்ப்பாட்டம் நடந்ததால் அங்கு விரைந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story