தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பரமக்குடியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின் படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரியும், தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல். சி. நிர்வாகத்தை கண்டித்தும் பரமக்குடி காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் ராமநாதன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கதிர்வேலன், முனியசாமி, ராஜன் அசோகன், சுதா முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் அன்பு தெட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மோதிலால், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் வாஞ்சி இப்ராஹிம், பாலு, வேல் மயில் முருகன், மாணிக்கவேல், சந்தை வெளியான், ராம்கி, கீழக்கரை நகர் செயலாளர் சேக் அப்துல்லா, இருளாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story