திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 1:00 AM IST (Updated: 15 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை


வங்கி பணிகளில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் இளைஞர்அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை தெற்குவாசல் கிரைம்பிராஞ்ச் பகுதியில் நடந்தது. மேலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கணேசன் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட காப்பாளர் எடிசன்ராஜா, மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், உசிலை மாவட்ட தலைவர் எரிமலை, உசிலை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு ஆர்ப்பாட்ட நிறைவுரை ஆற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


Next Story