திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட கழக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்றார். மாவட்ட காப்பாளர்கள் காசி, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுப.சோமசுந்தரம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கல்வியாளர் ராஜவர்மன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

1 More update

Next Story