சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுடன் விரிவுப்படுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்கிடும் வகையில் சத்துணவு மையத்துடன் இணைக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஷகிலா தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன், மாவட்ட இணை செயலாளர் மகாலிங்கம், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஜயா, ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய பொருளாளர் பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story