அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் வேந்தன், செவிலியர் சங்க மாநில தலைவர் ஹேமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சேகர், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டிய 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், சங்க மாநில இணைச்செயலாளர் எஸ்.சுமதி நன்றி கூறினார்.


Next Story