அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரான்சிஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொருளாளர் சுப்பையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் ஊரக வளர்ச்சித்துறை வட்ட தலைவர் சிங்கராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story