அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் அமைந்துள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் நாவலரசன் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் சிவகுருநாதன், செல்வேந்திரன், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் மகேஷ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story