சென்னையில் வருகிற 6-ந்தேதிஅரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி


சென்னையில் வருகிற 6-ந்தேதிஅரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 3:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வருகிற 6-ந்தேதி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளாா்.

கடலூர்


தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு, அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வரவேற்கிறது. அதோடு 1.7.2022 முதல் நிலுவையில் உள்ள தொகையையும் வழங்க வேண்டும்.

சென்னையில் சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் வருகிற 6-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி உடனிருந்தார்.


Next Story