அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வட்டத்தலைவர் பிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபாலன், கணினி உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் அரசு பணியாளர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story