சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இணை செயலாளர் முத்துமாரி தலைமையிலும், மாவட்ட தலைவர்கள் ஜான்சி ராணி விமலா தேவி ஆகியோர் முன்னிலையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்துலட்சுமி, கார்த்திகாயினி, நாகலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும், குடியிருக்க தகுதியற்ற மையத்திற்கு பிடித்தம் செய்த வாடகையை திரும்ப வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


Next Story