விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3 மாதமாக வழங்கப்பட உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் பழனிவேல், சரவணபவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மகாதேவன், மாநில துணைத்தலைவர் முத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் கோவிந்தராஜ், சாலைப்பணியாளர் சங்க கள்ளக்குறிச்சி கோட்ட தலைவர் மாரிமுத்து, செயலாளர் சாமித்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story