நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் இளவரசன், ரமேஷ், மாநில தலைவர் கலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story