அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கணிதத்துறை விரிவுரையாளர் கனிமொழி தலைமை தாங்கினார். பொருளியல்துறை விரிவுரையாளர்கள் சங்கீதா, விஜயவல்லி, பாரதி, புனிதா, விமலா உள்பட பலர் பேசினர்.
கவுரவ விரிவுரையாளர்களை அரசாணை 56-யை பின்பற்றி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கல்லூரி பேராசிரியர் பணிநியமனத்தில் நேர்காணல் முறையை பின்பற்ற வேண்டும்.
மாநில தகுதி தேர்வு
எழுத்துதேர்வுமுறையை கைவிட வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் 52 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.