இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயப்பாண்டி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பை சிதைக்கும் தமிழக அரசின் அரசாணை எண் 152 மற்றும் 115-ஐ ரத்துசெய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுப்பணிகளில் தொகுப்பூதிய, ஒப்பந்த ஊதிய முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும். நீண்டகாலமாக ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை நிரந்தரப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story