இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஈளாடா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி தாலுகா துணை தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன், தாலுகா தலைவர் சுகுந்தன், இடைக்குழு உறுப்பினர் மணிவண்ணன், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடை ஆகிய கட்டிடங்களை இடித்து பல ஆண்டுகள் ஆகியும், புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். காந்திநகர் சமுதாயக்கூட பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் காந்திநகர் ஊர் தலைவர் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story