இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

திட்டச்சேரியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த நுபுல் சர்மா, நவின் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திட்டச்சேரி பெரிய பள்ளிவாசல் முகப்பில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்பு நிர்வாகசபை தலைவர் அப்துல் நாசர், செயலாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story