நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில செயற்குழு முடிவின் படி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கோ.காளிராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 26 அம்ச கோரிக்கயை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திருமாலை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், வட்ட செயலாளர் தவமணி பீட்டர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ரோமா மெர்லின் நன்றி கூறினார்.