நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதர்சன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கங்காதரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், நில அளவைத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது விரோத போக்கை கடைபிடிக்கும் தமிழ்நாடு நில அளவைத்துறை இயக்குனரின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் நில அளவை களப்பணியாளர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.