நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். நில அளவைத் துறையில் காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்ட நிரந்தர ஊழியர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளதால், ஏற்கனவே பணியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, எனவே நில அளவைத் துறையில் புல உதவியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஹேமராஜ், லட்சுமி, சீனிவாசன், ஜோசப் கென்னடி, நாராயண மூர்த்தி, அப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story