உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொது செயலாளர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். கிராம ஊராட்சிகளில் வேலைசெய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை காவலர், தூய்மை பணியாளர், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story