மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பையில் இந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இணைந்து மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் சபியாள் பீவி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சடையப்பன், வங்கி ஊழியர் சங்க செயலாளர் ரங்கன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், சிவந்திபுரம் நகர செயலாளர் நமச்சிவாயம், விவசாய சங்க செயலாளர் தர்மலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் அனை வீரக்கண்ணு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு அம்பை நகர செயலாளர் வடிவேல், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பத்தமடை நகர செயலாளர் ஷேக், காக்கநல்லூர் நகர செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அம்பை நகர துணைசெயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story