கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் மேற்கொண்டு அதை அழித்து நூதன முறையில் கோரிக்கையை எடுத்துக் கூறினார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''ஜமாபந்தி என்பது கண்துடைப்பு போன்று நடக்காமல் உண்மையாக நடைபெற வேண்டும். மனிதனுக்கு இயற்கையான அழகு சிறந்தது. ஒப்பனை அழகு நிரந்தரம் இல்லை. எனவே நியாயமானதாக ஜமாபந்தி நடைபெறுவது நிரந்தரமான அழகு போன்றது. இதை வலியுறுத்தும் வகையில் தான் நாங்கள் ஒப்பனை செய்து அதை கலைத்து கோஷங்களை எழுப்பினோம்'' என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story