நாமக்கல்லில்ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
70 வயது பூர்த்தி அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் மணி, மாவட்ட செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.7,850-ஐ சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் என அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.