வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நெல்லை மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று மாலை 4.45 மணி அளவில் மாலை 1 மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மேலும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளரும், நெல்லை மாவட்ட தலைவருமான சுப்பு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன், மகளிர் அமைப்பு செயலாளர் ஜேக்கலின் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில துணைத்தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


Next Story