வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சந்துரு, மாவட்ட துணை தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள உதவி கலெக்டர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவு உயர்வு வழங்கிட வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து பதவி உயர்வினை உறுதி செய்து உரிய ஆணைகள் வெளியிட வேண்டும், பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்கிட வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.