கறம்பக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கறம்பக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

கறம்பக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டப்பணிகளுக்கு டெண்டர் விட்டது தொடர்பாக கருத்து மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் மற்றும் ஒன்றிய பொறியாளர் அலுவலகம் பூட்டப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஒன்றிய பொறியாளர் அலுவலகம் பூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பால் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story