ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக. அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு உயர்த்தி வழங்கும் அதே விகிதத்தில் அதே நாளில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் செல்வகுமார் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா, குண சுந்தரி உள்பட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story