ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கே.எம்.நேரு தலைமை தாங்கினார். செயலாளர் பிரேம்குமார் வரவேற்று பேசினார். ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை நம்ம ஊரு சூப்பரு என்ற பெயரில் செயல்படுத்திட போதிய கால அவகாசம் இன்றியும், உரிய நிதி ஒதுக்கீடு இன்றியும், முறையான திட்டமிடல் இல்லாம் அதனை அமுல்படுத்திட வழங்கப்படும் நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், நம்ம ஊரு சூப்பரு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகளையும் விடுமுறை நாட்களில் மேற்கொள்ள மாட்டோம், அலுவலக நேரம் கடந்தும், விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் சார்பான ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என கலெக்டர் அமர்குஷ்வாஹாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story