ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பழனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பழனி வட்டக்கிளை தலைவர் மகுடபதி, பொருளாளர் ஏசடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டதை கண்டித்தும், நிறுத்தப்பட்ட நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story