ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கே.எம்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆர்.இளையராஜா வரவேற்று பேசினார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து பதவி உயர்வினை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், இரவு நேர ஆய்வு கூட்டங்கள், காணொளி கூட்டங்கள் தினசரி நடத்துவதை கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சிதுறையில் 27 பேருக்கு வழங்கப்பட்டுள்ள குற்றக்குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநில துணை தலைவர் திருவேரங்கன் ஆகியோர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அருண்மொழிவர்மன், வருவாய்துறை மாவட்ட செயலாளர் திருமால், மாவட்ட தலைவர் பூவண்ணன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத் தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story