ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

சாத்தான்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சங்க செயலர் முகம்மது மீரான் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். வட்டபொருளாளர் கோமதி, மாவட்ட துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஊராட்சி செயலர்களுக்கு பணி விதிகளை மேலும் தாமதமின்றி வெளியிடுவதுடன், விடுப்பட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்களின் பணி வரண் முறைகளை வெளியிடுவதுடன் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, பணி வரன்முறை படுத்துதல் இணை இயக்குநர், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதமின்றி வெளியிட வேண்டும் உள்ளிட்ட 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பிரதிநிதி பிரபு தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பேச்சி நன்றி கூறினார்.


Next Story