கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் பி.நெல்லையப்பன் தலைமை தாங்கினார்.
கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு அதிகாரிகள் வேலை இலக்கு என்ற பெயரில் மன உளைச்சல் உண்டாக்குவதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டார்கள்.
இதில் கிளைத்தலைவர்கள் கணேச மூர்த்தி, முருகன், கோட்ட செயலாளர் பூராஜா, பொருளாளர் எம். முருகன், கிளை செயலாளர்கள் பிச்சையா, பண்டாரம், கிளை பொருளாளர்கள் பட்டுராஜன், ஞானராஜ் பாண்டியன் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story