விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வீரபாண்டிபுரம் பஸ் நிறுத்தம் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். சமையல் எரிவாயு, அரிசி, கோதுமை தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முத்துலட்சுமி, வீரம்மாள், மகாலட்சுமி, பிரியா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story