விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
பேராவூரணி
பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிரந்தரமாக தடுத்து நிறுத்தக்கோரி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story