விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் இளையான்குடி கண்மாய் கரையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயம் பாதிக்காமல் 100 நாளிலிருந்து 200 நாளாக உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வருகை பதிவேட்டை காலை 7 மணிக்கு பதிலாக 9 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.. 7 மணிக்கு வருவதால் பெண்கள் தங்களது வீட்டுப் பணிகளை செய்வதில் சிரமப்படுகிறார்கள் என்றார். இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சாத்தையா, தொழிலாளர் சங்க பொருளாளர் ஆறுமுகம், இளையான்குடி ஒன்றிய செயலாளர் ராமநாதன் மற்றும் கலந்து கொண்டனர்.


Next Story