இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருமருகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி-நகராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story