தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 103-வது அரசியல் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், சமூக நீதியை நிலைநாட்டிட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர் மரபினர் உரிமை மீட்பு இயக்கம் அரிஹரபாண்டியன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி அப்துல் அஜீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story