சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இணைச்செயலாளர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார். பிரசார செயலாளர் ஜெகதா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஸ்டெல்லா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கிராம சுகாதார செவிலியர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை நியமிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story