மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மேலப்பாளையத்தில் மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் நாகூர்மீரான் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மேலப்பாளையத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை வழங்க மறுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில துணை தலைவர் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாவித், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் கோல்டன்காஜா, பொருளாளர் மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story