கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க.நிர்வாகிகளை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் உசேன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நகரமன்ற தலைவர் சுப்ராயலு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நிர்வாகி சர்புதீன், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவர் பக்கீர் முகமது, எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில பேச்சாளர் ஹசன்.பைஜி, உலாமா சபையை சேர்ந்த முகமது லத்தீப், மலஹிரி, அப்துல்காதர், நூரி, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி அல்லாபக்‌ஷ், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு துணை செயலாளர் அப்துல் லத்தீப், ஒருங்கிணைப்பாளர் காதர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story