மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி

திருச்சி, ஜூன்.21-

திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கல்மந்தை காலனியில் பழைய வீடுகளை இடித்து விட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுவீடு மற்றும் குடிசை வீடுகள் அமைத்து குடியிருந்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். குடியிருந்த மக்களிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் கார்டு, ஆதார் கார்டு அடிப்படையில் விசாரணை செய்து வீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கல்மந்தைகாலனி பொதுமக்கள் சார்பில் திருச்சி-மதுரைரோட்டில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வு மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், ரேணுகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சியம், மகாலிங்கம், அழகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story