மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை அவுரி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நாகைமாலி எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மை மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலை கண்டித்தும், அதற்கு துணை போகும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story