சாராய விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாராய விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சாராய விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 140-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சில கிராமங்களில் சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி வெளி மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள். ஆகவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்க தவறியதற்காகவும், மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் கரியாலூர் போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கரியாலூர் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைபார்த்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினா். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சில நிமிடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story